ஆப்நகரம்

அஜித் படத்தில் இணையும் பிரபல கன்னட நடிகை!

‘பிங்க்’ ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர் அஜித்துடன், இன்னொரு நாயகியாக பிரபல கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணையவுள்ளார்.

Samayam Tamil 27 Dec 2018, 4:41 pm
நடிகர் அஜித், ‘தீரன்’ பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தில் தற்போது ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil ajith


இந்நிலையில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒரு வேடத்தில் நஸ்ரியாவும், மற்றொரு வேடத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணியும் நடிக்கின்றனர். தற்போது 3வது கேரக்டரில் நடிக்க நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்