ஆப்நகரம்

ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வரும் நடிகை ஸ்ரேயாவின் கணவர்!

டென்னிஸ் வீரரான நடிகை ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கோஸிங் தற்போது ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது

Samayam Tamil 19 Mar 2018, 5:44 pm
டென்னிஸ் வீரரான நடிகை ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கோஸிங் தற்போது ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil shriya-saran


நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் பிரபலமானவர். சமீபத்தில் இவர் தன் காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் சினிமா சம்பந்தப்பட்ட யாரும் அழைக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கோஸிவ், ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரர். மேலும் இவர் ஒரு தொழிலதிபரும் கூட. இவர் சாப்பாட்டில் மிக அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் முதலில் ஒரு சிறிய ஹோட்டலை ஆண்ட்ரே கோஸிவ் திறந்துள்ளார். அதில் அதிக லாபம் கிடைத்ததால் அதன் பிறகு பல பகுதிகளில் தன் ஹோட்டலின் கிளையை விரிவுபடுத்தி அதை தற்போது கவனித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்