ஆப்நகரம்

லாக் டவுனில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள 'எட்ஜ்' ஆல்பம் பாடல் - வீடியோ

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது ஒரு ஆல்பம் பாடலை பாடி இசையமைத்து வெளியிட்டிருக்கிறார்.

Samayam Tamil 8 Aug 2020, 8:22 pm
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது கொரோனா லாக்டவுனில் தனது வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில் தனக்கு அதிகம் பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். பாடல் பாடுவது, இசை உள்ளிட்ட விஷயங்களை அவர் செய்யும் சில வீடியோக்களை இதற்கு முன்பு வெளியிட்டு இருக்கிறார். அவை ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து இருக்கின்றன.
Samayam Tamil Shruti Haasan


மேலும் இந்த ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல்.

எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஸ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஸ்ருதி இது குறித்து கூறும்போது

“இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது என ஸ்ருதி ஹாசன் கூறி உள்ளார்.

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’-ல் ஸ்ருதி பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.

இப்பாடல் இன்று விஎஹ்1 மற்றும் ஷ்ருதியின் யூடியூப் சேனலில் வெளியானது.


இந்த பாடல் உருவாக்க காரணம் என்ன என்பது பற்றி பேசிய அவர், "இந்த லாக் டவுன் என்னை ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது. என்னை வேறு விதமாக அது யோசிக்க வைத்தது அது. என் உள் இருக்கும் உணர்ச்சிகளில் வெளிப்பாடாகவே எட்ஜ் பாடல் உருவானது. நான் என்னை எப்படி பார்க்கிறேன், நான் என்னை எப்படி நேசிக்கிறேன் என்பதை காட்டும் அது. ஒரு சாதாரண நாளில் அல்லது சூழ்நிலையில் நம்மை பற்றி சில முக்கிய விஷயங்களை புரிந்த கொள்ள முடியாது. ஆனால் இது போன்ற எட்ஜில் இருக்கும்போது, நாம் ஒன்றை பற்றி பயத்தில் இருக்கும் போது தான், நாம் ஒன்றை கற்று கொள்ள முடியும். இந்த பாடலும் அதை பற்றியது தான் என ஸ்ருதி ஹாசன் கூறி உள்ளார்.

ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் நடித்துள்ள கிராக் என்ற படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அந்த படத்தில் அவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இயக்குனர் கோபிசந்த் அதனை இயக்கி உள்ளார். இந்த படம் கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் முடங்கி இருக்கிறது. அது ஓடிடி இணையத்தளபதில் வெளிவரலாம் என தகவல் பரவிய நிலையில் அதனை படக்குழு மறுத்து இருக்கிறது.

தமிழில் ஸ்ருதி ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் கடைசியாக சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு தற்போது லாபம் படத்தில் தான் அவர் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்