ஆப்நகரம்

எனக்கு புகையிலை சிகரெட், பென்சில், எரேசர் ஸ்மெல் பிடிக்கும்: ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு பிடித்த வாசனைகள் பற்றி கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Apr 2020, 4:04 pm
தற்போது லாக்டவுன் நேரத்தில் பல்வேறு பிரபலங்கள் தாங்கள் செய்யும் விஷயங்களை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
Samayam Tamil Shruti Haasan


நடிகை ஸ்ருதி ஹாசனும் அப்படி பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சில வாரங்கள் முன்பு அவர் தென்பாண்டி சீமையிலே பாடலை வித்யாசமாக பாடி வீடியோ வெளியிட்ட போது அது அதிகம் வைரலானது.

மேலும் ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். அது மட்டுமின்றி தனது பிடித்த விஷயங்கள் பற்றியும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் பதிவிட்டுள்ள ஸ்டேட்டஸ் ஒன்றில் தனக்கு அதிகம் பிடித்த வாசனைகள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். "ரோஸ், சாக்லெட், cedar wood, பென்சிலில் இருக்கும் வுட், Ferrero Rocher உள்ளே இருக்கும் ஸ்மெல், புதிய லெதர், சிகரெட் ஸ்மெல் - புகைக்கும் போது அல்ல, சாதரணமாக அந்த புகையிலை வாசனை எனக்கு பிடிக்கும், குழந்தை பருவத்தில் பயன்படுத்திய Eraser, மற்றும் வெண்ணிலா " ஆகிய வாசனைகள் எனக்கு அதிகம் பிடிக்கும் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துளளார்.


மேலும் ஸ்ருதி ஹாசனின் அடுத்த படம் பற்றிய ஒரு செய்தியும் தெலுங்கு சினிமாவில் வேகமாக பரவி வருகிறது. ஜூனியர் என்டிஆர் அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் தான் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்