ஆப்நகரம்

போதிதர்மரை கொண்டு வா ; ஷ்ருதிஹாசன் ஷேர் பண்ண மீம்!

போதி தர்மர் பற்றிய மீம் ஒன்றை நடிகை ஷ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2020, 10:19 am
சூர்யா, ஷ்ருதிஹாசன் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் ஏழாம் அறிவு. இந்த படத்தில் வைரஸ் கிருமியால் பரவும் ஒரு நோயை வேண்டுமென்றே சிலர் இந்தியாவில் பரப்ப முயல்வார்கள். அந்த நோயை ஒழிக்க, ஷ்ருதிஹாசன் மற்றும் அவரது நண்பர்கள் போதி தர்மனின் மரபணு கொண்டுள்ள வாரிசான சூர்யாவை பயன்படுத்துவார்கள். போதி தர்மனின் ஆற்றலை திரும்ப எழுப்ப முடியும் என அந்த திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
Samayam Tamil shruti haasan shared a meme in her instagram account
போதிதர்மரை கொண்டு வா ; ஷ்ருதிஹாசன் ஷேர் பண்ண மீம்!


இந்நிலையில், இதை கொரோனா வைரஸ் பிரச்னையுடன் சேர்த்து நெட்டிசன்கள் காமெடியாக மீம் உருவாக்கி கலாய்த்துள்ளனர். இந்த மீம் ஷ்ருதியை கவர்ந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஷ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள மீம் இதோ.


வடிவேலு நடித்திருந்த வரவு எட்டணா செலவு பத்தணா படத்திலிருந்து ஒரு காட்சியை டெம்ப்ளேட்டாக பயன்படுத்தி, இந்த மீமை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் வடிவேலு, இன்னும் 7 நாள்ல போதி தர்மர கொண்டு வா என கேட்பதாக அமைந்துள்ளது. கோவை சரளா உருவத்துக்கு பதில் ஷ்ருதிஹாசன் முகம் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஷ்ருதி ரசித்து ஷேர் செய்துள்ளார்.

ஷ்ருதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிங்கம் 3. தற்போது எஸ்பி ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்