ஆப்நகரம்

ஸ்ருதி - தமன்னா ஜோடி ஜெயிக்குமா?

நடிப்புடன் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் கலக்கி வரும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தமன்னாவுக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார்.

Samayam Tamil 28 Aug 2016, 2:43 am
நடிப்புடன் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் கலக்கி வரும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தமன்னாவுக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார்.
Samayam Tamil shruti haasan to croon a special number for tamannaah in the upcoming film
ஸ்ருதி - தமன்னா ஜோடி ஜெயிக்குமா?


தமன்னா – விஷால் நடிப்பில் உருவாகி வரும் கத்திச் சண்டை திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் பரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்திற்கான இசையமைப்பு வேலையையும் நடந்து வருகிறது. படத்தின் ஒரு பாடல் மட்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையே, இந்தப் படத்திற்காக ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் சுராஜ் விரும்பியுள்ளார். உடனே, தமன்னாவுக்காக கத்திச் சண்டை படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று ஸ்ருதிஹாசனிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். அதற்கு ஸ்ருதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால், ஸ்ருதி பாடும் அந்த பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஹிப் பாப் தமிழா தொடங்கியுள்ளார். இந்தப் படத்தின் வெளியீடு தீபாவளியை ஒட்டி இருக்கும் என்பதால் ஸ்ருதி – தமன்னா ஜோடியில் வெளியாகும் பாடல் ஹிட்டாகுமா என்பதை அறிய கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்