ஆப்நகரம்

தனது காதலரை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் தனது காதலர் மைக்கேல் கோர்சலை அழைத்து வந்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2018, 5:52 pm
நடிகை ஸ்ருதிஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் தனது காதலர் மைக்கேல் கோர்சலை அழைத்து வந்துள்ளார்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90


நடிகை ஸ்ருதிஹாசன் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மேலும் அவர் வந்து விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாடல்களை பாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அந்த நிகழ்ச்சிக்கு தன் காதலர் மைக்கேல் கோர்சலை உடன் அழைத்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக பிக்பாஸ் மேடையில் நின்றிருக்கும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சல் தற்போது ஸ்ருதி ஹாசனை பார்க்க கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்