ஆப்நகரம்

ராஜ்குமார் ராவின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்யும் ஸ்ருதிஹாசன்!

கமலை சந்திக்க வேண்டும் என்ற ராஜ்குமார் ராவின் நீண்டநாள் ஆசையை நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் பூர்த்தி செய்யவுள்ளார்.

TNN 9 Jun 2017, 6:54 pm
கமலை சந்திக்க வேண்டும் என்ற ராஜ்குமார் ராவின் நீண்டநாள் ஆசையை நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் பூர்த்தி செய்யவுள்ளார்.
Samayam Tamil shruti hassan helps rajkummar rao to meet her dad
ராஜ்குமார் ராவின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்யும் ஸ்ருதிஹாசன்!


ராஜ்குமார் ராவ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த பாலிவுட் படம் ‘பெஹன் கோஹி டெரி’. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது.

“ஸ்ருதி அற்புதமான நடிகை. ஸ்கிரீனில் பார்க்கும்போது அழகு தேவதையாகத் தெரிகிறார். தன்னுடைய வேலையில் கமிட்டடாக இருக்கும் பெண். எங்கள் இருவருக்குமான ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது” என ஸ்ருதியைப் புகழ்ந்துள்ளார் ராஜ்குமார் ராவ்.

ராஜ்குமார் ராவ் நடிகர் கமலின் மிகப்பெரிய ரசிகராம். கமலை லெஜண்ட் எனக் குறிப்பிடும் ராஜ்குமார் ராவ், எப்போதுமே அவர் இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியுள்ளார்.

கமல் நடித்த பல படங்களைப் பார்த்திருந்தாலும், குள்ளனாக நடித்த ‘அப்பு’ கேரக்டர் தான் தனக்கு மிகவும் பிடித்தது எனத் தெரிவித்துள்ளார். கமலைச் சந்தித்து சினிமா பற்றிப் பேசவேண்டும் என்பது அவரின் நீண்டநாள் ஆசையாம். அந்த ஆசையை ஸ்ருதிஹாசனிடம் சொல்ல, அவரும் நிறைவேற்றுகிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளாராம்.

Shruti Hassan helps her co star Rajkummar Rao to meet Kamal Hassan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்