ஆப்நகரம்

வால்டர் என்னோட படம்: பிரச்சனை செய்யும் சிங்காரவேலன்!

சிபிராஜ் நடிப்பில் இன்று பூஜையுடன் தொடங்கிய வால்டர் படம் என்னுடையது என்று விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 14 Jun 2019, 6:15 pm
சிபிராஜ் நடிப்பில் இன்று பூஜையுடன் தொடங்கிய வால்டர் படம் என்னுடையது என்று விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்.
Samayam Tamil walter


தமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிங்காரவேலன். இவர் சில மாதங்களுக்கு முன் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர் என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். 'வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும் அப்படி இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.




இது பற்றி இயக்குநர் அன்பரசன் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. சிங்காரவேலன் லிங்கா பிரச்சனை மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர். மேலும் பல சினிமா ஃபைனான்ஸ் பிரச்சனைகளில் இவர் பெயர் முன்னணியில் இருக்கும். இப்போது இவர் தயாரிப்பில் இருந்த படத்தையே வேறு தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்