ஆப்நகரம்

சிம்புவை தொடர்ந்து வைரலாகும் சிபிராஜின் ஒர்கவுட் வீடியோ

சமீபத்தில் சிம்பு ஒர்கவுட் செய்யும் வீடியோ வைரலான நிலையில், தற்போது சிபிராஜ் கரலாக்கட்டை சுற்றும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Samayam Tamil 15 Apr 2020, 10:18 am
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
Samayam Tamil Sibiraj


சினிமா நட்சத்திரங்களும் தங்கள் வீட்டுக்குள்ளேயே என்ன செய்கிறோம் என்கிற வீடியோ மற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஜிம்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தே ஒர்கவுட் செய்து வருகின்றனர்.

நடிகர்களுக்கு உடல் ஃபிட்டாக இருப்பது அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். மற்றவர்களை விட நடிகர்கள் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர அதுதான் காரணம்.

சமீபத்தில் நடிகர் சிம்பு தனது வீட்டுக்கு உள்ளேயே உடற்பயிற்சிக்காக ஓடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிபிராஜ் தனது வீட்டுக்கு உள்ளேயே கரலாக்கட்டையை சுற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

பல்வேறு விதமான உடற்பயிற்சி உபகரணங்கள் வந்துவிட்ட நிலையில் தமிழர்களில் பாரம்பரிய உடற்பயிற்சி உபகரணமான கரலாக்கட்டையில் சிபிராஜ் உடற்பயிற்சி செய்துள்ளது பலரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளது.

View this post on Instagram Back to our roots! #karalakattai #clubbelltraining #clubbell #clubbellstrength #mgr #Sibiraj #Sibisathyaraj #Sathyaraj #தமிழன் A post shared by Sibi Sathyaraj (@sibi_sathyaraj) on Apr 14, 2020 at 6:52am PDT

பிரபல நடிகரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமாகிய எம்ஜிஆர் அவர்கள் தினமும் 4 மணிக்கு எழுந்து கரலாக்கட்டை சுற்றும் உடற்பயிற்சியை அரை மணி நேரம் செய்வாராம். தனது ஆரோக்கியத்திற்கு அது தான் காரணம் என அவரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வால்டர் படம் வெளிவந்திருந்தது, அதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அவர். அதனை தொடர்ந்து அவர் நடித்துள்ள மாயோன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரங்கா, வட்டம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் சிபிராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்