ஆப்நகரம்

பிரியா வாரியருடன் செல்பி எடுத்துக் கொண்ட சித்தார்த்!

நடிகர் சித்தார்த், கண் சிமிட்டல் நாயகி பிரியா வாரியருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2018, 4:47 pm
நடிகர் சித்தார்த், கண் சிமிட்டல் நாயகி பிரியா வாரியருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil priya-siddharth


நடிகை பிரியா வாரியர் தன்னுடைய முதல் படமான ‘ஒரு அடார் காதல்’ என்ற மலையாள படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியின் டீசரில் வகுப்பறையில் சக மாணவனை பார்த்து பிரியா வாரியர் கண்ணடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் பிரியா வாரியரின் கண் சிமிட்டல் நடிப்பு அவரை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் மத்தியில் பிரபலமடையச் செய்துள்ளது.

இதன்மூலம் அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நிறைய படங்கள் ஓப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழில் சூர்யா -செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே.’ படத்தில் பிரியா வாரியரை ஹிரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் சித்தார்துடன் பிரியா வாரியர் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது . இதனால் அவர் சித்தார்த் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்