ஆப்நகரம்

இசைஞானி இளையராஜாயுடன் ஜோடி போட்ட இயக்குனர் ஷங்கர்?

இசைஞானி இளையராஜாவும், இயக்குனர் ஷங்கரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Samayam Tamil 30 Mar 2019, 5:36 pm
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘2.0’. இந்தப் படம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
Samayam Tamil shankar


இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதற்கிடையில் இந்தப் படம் கைவிடப்பட்டது என்று ஒரு வதந்தி வெளியான நிலையில் ஒருவழியாக எல்லா பிரச்னைகளும் முடிந்து தேர்தலுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தற்போது ஷங்கரை பற்றி ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ஷங்கர் & இசைஞானி இளையராஜா கூட்டணி அமையுமா என்று பலரும் மேடைகளில் கேள்வி கேட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு முறை இணைத்துள்ளார்கள். இந்த உண்மை தகவல் இளையராஜா 75 நிகழ்ச்சியில் தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் எல்லோரும் வரி கட்ட வேண்டும் என்ற அரசு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர்தான் இயக்கியிருந்தார். இந்த விளம்பரப் படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருந்தாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்