ஆப்நகரம்

"ஒரே மேடையில் சிம்பு,விஷால்"-என்ன நடக்கப் போகுதோ?

”சிம்பா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

TNN 7 Mar 2017, 4:27 pm
”சிம்பா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Samayam Tamil simbu and vishal will attend simba audio launch function
"ஒரே மேடையில் சிம்பு,விஷால்"-என்ன நடக்கப் போகுதோ?


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் போது நடிகர் விஷால் அணிக்கு எதிராக,சரத் குமார் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார் நடிகர் சிம்பு.மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில்,விஷால் அணியினரை சிம்பு திட்டித் தீர்த்தார்.இதனால் தமிழ் திரையுலகில் இருவருக்குமே மறைமுகமான ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பரத் மற்றும் பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிம்பா’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது.இந்த விழாவில் விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு,பாடலை வெளியிட உள்ளனர்.

பொதுவாக சிம்பு மற்றும் விஷால் ஆகிய இருவரும் வெளிப்படையாகவும்,உணர்ச்சிவசப்பட்டும் பேசக் கூடியவர்கள்.எனவே நாளை நடைபெற உள்ள விழாவில்,இருவரும் யாரைத் தாக்கி பேசப் போகிறார்களோ,என்ன பேசப் போகிறார்களோ என தமிழ் திரையுலகமே பரபரப்புடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

Simbu and Vishal will attend Simba Audio launch function

அடுத்த செய்தி

டிரெண்டிங்