ஆப்நகரம்

சிம்புவுக்கு வில்லனாகிறாரா ஆர்யா?

சிம்புவின் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Mar 2020, 5:09 pm
சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். சுந்தர் சி இயக்கியிருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் சிம்பு தனது அடுத்த படமான மாநாடு மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil simbu and arya


இந்நிலையில், சிம்பு நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றிய தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் அவர் புதிய படத்தில் நடிப்பதாகவும், அதில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட படத்தை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, மாநாடு படத்தை முடித்துக் கொண்டு மிஷ்கின் கதையில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து, சுதா கொங்கரா சிம்புவுக்காக கதை ஒன்றை தயார் செய்து வைத்திருப்பதாகவும், சிம்பு ஓகே சொன்னால் படம் உறுதியாகிவிடும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான், ஆனந்த் ஷங்கர் படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. விரைவில் சிம்பு இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிடுவார் எனவும், உடனடியாக படத்தை ரிலீசுக்கு கொண்டு வர தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்