ஆப்நகரம்

தயாரிப்பாளர் சங்கத்தை பாடல் பாடி வம்பிழுக்கும் சிம்பு

நடிகர் சிம்பு, தயாரிபபாளர் சங்கத்தை சூசமாக சாடி இன்ஸ்டாகிராமில் பாட்டு பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Nov 2018, 5:08 pm
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தனக்கு இருக்கும் மோதல்களுக்கு, தான் நடித்து வரும் புதிய படத்தின் பாடல் மூலம் நடிகர் சிம்பு பதிலளிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil Simbu.
’ரெட் கார்டு’ போன்ற சங்கத்துக்கு சிம்பு சொன்ன ’ரெக்கார்டு’ பதில்


’அன்பானவன் அசராவதன் அடங்காதவன்’ படப்பிடிப்புக்கு நடிகர் சிம்பு தாமதமாக வந்ததால், தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்தார்.

அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சிம்புக்கு படங்களில் நடிக்க ‘ரெட் கார்டு’ போடலாம் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ’செக்க சிவந்த வானம்’ படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது அவர் சுந்தர். சி இயக்கும் ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், படத்தின் டிரெய்லர் ரஜினியின் 2.0 திரைப்படத்தோடு திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனத் இன்ஸ்டாகிராமில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் கொண்ட பாடலை பதிவிட்டுள்ளார்.

இது தயாரிப்பாளர் சங்கத்துடன், தனக்கு இருக்கும் மோதலை எதிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நடிகர் சங்க தேர்த போது, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை நடிகர் சிம்பு எதிர்த்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்