ஆப்நகரம்

அரசியலில் தொபுக்கடீர்னு குதிக்கும் சிம்பு?

சிம்பு பற்றி அவருக்கு நெருக்கமான ஒருவர் போட்டுள்ள ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Sep 2019, 9:51 am
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற அரசியல் படத்தில் நடிக்க இருந்தார் சிம்பு. ஆனால் அவருக்காக படக்குழு காத்திருக்க சிம்புவோ மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கச் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
Samayam Tamil simbu


அந்த அறிவிப்பு வெளியான கையோடு சிம்பு தானே இயக்கி, மகா மாநாடு படத்தில் நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த பட வேலைகள் இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு நெருக்கமான ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

#எஸ்டிஆர் #சென்னை திரும்பியதும் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.



சிம்பு அரசியலுக்கு வரக்கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தை டி.ஆர். வழியில் சிம்பு அரசியலுக்கு வரப் போகிறார், அதனால் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்று பேசப்படுகிறது.

கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார், ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு அரசியல் களத்தில் குதிக்க உள்ளாராம். இளம் வயதிலேயே சினிமாவில் சாதனைகள் படைத்த சிம்புவால் அரசியலில் நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

சிம்பு படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரால் அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது. அரசியலுக்கு வந்தால் காமெடி பீஸாகிவிடுவார். வராத விஷயத்தை எதற்காக செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்