ஆப்நகரம்

மீண்டும் காதல் தோல்வி பாடல் பாடும் சிம்பு

சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (அஅஅ)' படத்தில் காதல் தோல்வி குறித்த பாடல் ஒன்றை பாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 7 Jul 2016, 2:56 pm
சென்னை: சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (அஅஅ)' படத்தில் காதல் தோல்வி குறித்த பாடல் ஒன்றை பாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil simbu to pen a love breakup song in upcoming film
மீண்டும் காதல் தோல்வி பாடல் பாடும் சிம்பு


'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தரன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு முதன் முறையாக 3 மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசயமைகவிருக்கும் இபப்டத்தில் சிம்பு எழுதி பாடவிருக்கும் காதல் தோல்வி பாடல் விரைவில் ஒலிப்பதிவாக உள்ளதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரோமென்ஸ், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த இப்படத்தில் இடமேப்ரும் காதல் தோல்வி பாடல் எந்த ஒரு இசையும் சேர்க்காமல் சிம்புவின் குரலில் மட்டும் ஒலிக்கும், இப்பாடல் ஆண்டின் சிறந்த பாடலாக தேர்வாகும் என இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெறவுள்ள நிலையில், ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா 3 பாடல்களை நிறைவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்