ஆப்நகரம்

தெலுங்கு ரீமேக் படத்தில் நடிகர் சிம்பு!

சுந்தர் .சி இயக்கவுள்ள தெலுங்கு ரீமேக் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 14 Aug 2018, 3:48 pm
சுந்தர் .சி இயக்கவுள்ள தெலுங்கு ரீமேக் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார்.
Samayam Tamil sundar c


நடிகரும் இயக்குனருமான சுந்தர் .சி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கலகலப்பு 2’. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக சுந்தர் .சி ‘சங்கமித்ரா’ படத்தை இயக்குவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், தற்போது வந்த தகவல்படி இயக்குனர் சுந்தர் .சி அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தெரிகிறது. தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டான படம் ‘அத்தாரிண்டிகி தாரேதி’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படம் அஜீத், விஜய்க்காக வாங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

2013ல் வெளியான ‘அத்தாரிண்டிகி தாரேதி’ படத்தை த்ரிவிக்ரம் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு நான்கு நந்தி விருதுகள் கிடைத்தது. இந்தப் படம் தமிழைத் தவிர இந்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்