ஆப்நகரம்

தயாரிப்பாளருக்கு பெருமை சேர்த்த சிம்பு

சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அனைத்து விநியோக உரிமைகளும் விற்றுவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் தற்போது ரொம்ப குஷியில் இருக்கிறார்.

TNN 31 May 2017, 3:41 pm
சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அனைத்து விநியோக உரிமைகளும் விற்றுவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் தற்போது ரொம்ப குஷியில் இருக்கிறார்.
Samayam Tamil simbus aaa movie distribution rights sold out producer very happy
தயாரிப்பாளருக்கு பெருமை சேர்த்த சிம்பு


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தின் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, நீத்து சந்திரா மற்றும் சனா கான் ஆகியோர் நடிக்கின்றனர். 4 வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகம் வரும் ஜூன் 23ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமைக்கான வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சென்னை, மதுரை, வட மற்றும் தென் ஆற்காடு, செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றின் விநியோக உரிமை விற்பனையாகியுள்ளது. இது தவிர மற்ற பகுதிகளின் உரிமைகளும் விற்று தீர்ந்துவிட்டதால், தயாரிப்பாளர் பெரும் குஷியில் இருக்கிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், சிம்புவின் அறிமுகப் பாடலுக்கான படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கப்படவுள்ளது. முதல் பாகத்தில் சிம்புவின் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகியவற்றின் கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும். இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து 2ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்