ஆப்நகரம்

அரசியல் மாநாட்டுக்கு சிம்பு வண்டி கிளம்பியிருச்சு!கூடவே வெங்கட் பிரபுவும் போறாராம்!

சிம்பு நடிக்கும் அரசியல் படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர்.

Samayam Tamil 10 Jul 2018, 4:55 pm
சிம்பு நடிக்கும் அரசியல் படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர்.
Samayam Tamil str


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்பு. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் எதிர்மறை விமர்சனத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இதில், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அதோடு, வெங்கட் பிரபு இயக்கத்திலும் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர். வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். காதலால் சிம்பு வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்கள்!


சிம்பு
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், ஜான்வி கபூர் நடிக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், படத்தின் கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகே நடிகை குறித்து முடிவு செய்யப்படும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மதனுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சிம்பு, ஜோதிகா!

11 வருடங்களுக்கு பிறகு டி. ராஜேந்தர் இயக்கத்தில் உருவாகும் "இன்றைய காதல் டா"!

அடுத்த செய்தி

டிரெண்டிங்