ஆப்நகரம்

உடல் எடையை குறைக்க பாங்காக் செல்லும் சிம்பு!

நடிகர் சிம்பு, தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக பாங்காக் செல்கிறார்.

Samayam Tamil 29 Dec 2018, 4:09 pm
நடிகர் சிம்பு தற்போது சுந்தர் .சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இந்தப்படம் தெலுங்கில் வெளியான ‘அத்தரிண்டிக்கி தாரிடி’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.
Samayam Tamil simbu


இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்தப் படம் அரசியல் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்துதின் கேரக்டருக்காக உடல் எடையை சற்று குறைக்க முடிவெடுத்திருக்கிறாராம். அதற்காக நடிகர் சிம்பு பாங்காக் செல்கிறாராம். தற்போது மாநாடு படத்தின் ஃப்ரீ புரடெக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாம். விரைவில் இதன் படபிடிப்பைத் துவங்கி அடுத்தாண்டு இறுதியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்