ஆப்நகரம்

சிங்கத்துடன் மோதும் ‘பாம்பு சட்டை’!

சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படமும், பாபி சிம்ஹா நடித்த ‘பாம்பு சட்டை’ படமும் ஒரே நேரத்தில் மோதவுள்ளன.

TOI Contributor 8 Dec 2016, 5:20 pm
சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படமும், பாபி சிம்ஹா நடித்த ‘பாம்பு சட்டை’ படமும் ஒரே நேரத்தில் மோதவுள்ளன.
Samayam Tamil singam 3 and pambu sattai will fight in the theatres on 23rd december
சிங்கத்துடன் மோதும் ‘பாம்பு சட்டை’!


ஆதம்தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘பாம்பு சட்டை’. இந்தப் படம் பாபிசிம்ஹாவை இன்னொரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தக்கூடும். இந்தப் படத்தில் பானுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இயக்குனர் ஆதம்தாசன் கூறுகையில் ‘‘பாம்புசட்டை’ படத்தில் கிளாமர், வன்முறை காட்சிகள் எதுவும் இல்லை. அதனால் கண்டிப்பாக யு சான்றிதழ்தான் கிடைக்கும். படத்தை ஒரு வாரத்திற்கு முன்பே தணிக்கைக்குழுவின் பார்வைக்கு அனுப்பி விட்டோம். இன்னும் சில தினங்களில் படத்திற்கான சான்றிதழ் என்னவென்று தெரிந்து விடும். அதோடு, டிசம்பர் 23-ம்தேதி சூர்யாவின் சிங்கம்-3 வெளியாகும் அதே நாளில் பாம்புசட்டை படத்தை யும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ரிலீசுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.

ஒரே நாளில் சூர்யாவின் ‘சிங்கம் 3’, பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’ மோதவுள்ளன.

Singam 3 and Pampu Sattai will fight in the theatre on 23rd December

அடுத்த செய்தி

டிரெண்டிங்