ஆப்நகரம்

40 வயதில் 28 வயது காதலருடன் மூன்றாவது திருமணம்: பாடகி கல்யாணத்தில் பரபரப்பு.!

பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணத்திற்கு வந்த முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2022, 10:44 am
உலகப் புகழ் பெற்ற பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜேசன் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் வெறும் 55 மணி நேரம் மட்டுமே நீடித்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார் பிரிட்னி.
Samayam Tamil Britney Spears
Britney Spears


முதல் திருமணம் தோல்வியடைந்த நிலையில் கெவின் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார் பிரிட்னி ஸ்பியர்ஸ. இந்த திருமணமும் தோல்வியில் முடிய கடந்த 2007ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இந்நிலையில் 40 வயதான பாடகி பிரிட்னி 28 வயதான தனது காதலனை தற்போது திருமணம் செய்துள்ளார்

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த சில ஆண்டுகளாக அஸ்காரி என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ் காதலித்து வந்தார். இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளதுது. இந்த திருமணத்திற்கு உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்ஸ்யின் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்ததால் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி திருமண நடக்கும் இடத்திற்கு ஜேசன் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கையில் குழந்தையுடன் குட் நியூஸ் சொன்ன சூர்யா, கார்த்தி பட நடிகை: குவியும் வாழ்த்துக்கள்.!

பிரிட்னி ஸ்பியர்ஸ் அழைப்பின் பேரில்தான் வந்ததாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் ஜேசன் விளக்கமளித்தும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்