ஆப்நகரம்

சின்மயிக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்த டப்பிங் யூனியன்!

பாடகி சின்மயிக்கு சினிமா டப்பிங் யூனியன் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 29 Dec 2018, 4:17 pm
இந்தியாவில் மீடூ என்கிற விஷயம் காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்த மீடூ பிரச்னையில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அது மட்டுமின்றி அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆதாரத்துடன் புகார் கூறினார்.
Samayam Tamil chinmayi


இது ஒருபுறமிருக்க டப்பிங் யூனியனுக்கு சின்மயி சந்தா செலுத்தவில்லை என கூறி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் அவர் தமிழ் சினிமாவை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் சர்ச்சை வெடித்தது. தன்னை பழிவாங்க ராதாரவி இப்படி செய்துள்ளதாக சின்மயி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தற்போது சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்க்க 1.5 லட்சம் ருபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.

டப்பிங் யூனியன் கூறியதை பாடகி சின்மயி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்