ஆப்நகரம்

அனிருத்தை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்ன பிரபல பாடகி: ஓ இதான் விஷயமா.!

பாடகி ஜொனிதா காந்தி இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2022, 6:51 pm
தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் இசையில் மாதம் ஒரு படம்தவறாமல் ரிலீசாகி விடுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என வரிசையாக 4 முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகி விட்டன.
Samayam Tamil Jonita Gandhi
Jonita Gandhi


இளம் இசையமைப்பாளரான அனிருத், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல் கீர்த்தி சுரேஷை அவர் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது பின்னர் இருவரும் நண்பர்கள் எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் பிரபல பாடகியான ஜோனிடா காந்தியும், அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. ஜோனிடா காந்தி அண்மையில் மெஹா ஹிட்டடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலை பாடி பேமஸ் ஆனார்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்ற ஜோனிடா இன்றைய இளைஞர்களின் கிராஸ் லிஸ்டில் இடம் பிடித்தார். இந்நிலையில் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட பாடகி ஜோனிடா காந்தியிடம், ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

Thalaivar 169: உஷாரான ரஜினி.. ‘தலைவர் 169 ‘படத்தில் நிகழும் அதிரடி மாற்றம்..!
அதற்கு ஜோனிடா, சூர்யா, ரன்வீர்சிங் ஆகியோர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என்று தெரிவித்துள்ளர். அவர் விளையாட்டாக இந்த பதிலை கூறினாலும், ரசிகர்கள் உங்க ஜோடி பொருத்தம் செம்மையாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்