ஆப்நகரம்

சிங்கம் 3: இணைய தளங்களில் வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TNN 6 Feb 2017, 1:41 pm
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil singham 3 hc dismissed plea on pirated release through websites
சிங்கம் 3: இணைய தளங்களில் வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி


தமிழ் திரையுலகில் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் திருட்டுத் தனமாக இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினரை கடும் பாதிப்புக்குள்ளாக்குக்கின்றன. இந்நிலையில், தற்போது சூர்யா நடித்துள்ள 'சிங்கம் 3' படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைக் கோரி அப்படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவில் படத்தை சட்டவிரோதமாக, தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 173 இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய இணைய தளம் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கும்படி கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, இந்த வழக்கு நீதிப்பேராண்மை வழக்காக விசாரிக்க உகந்தது அல்ல என்றும், இதற்கு மாறாக உரிமையியல் வழக்காக தொடரலாம் என்றும் தெரிவித்தார்.

ஆகையால், இம்மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தெரிவித்ததையடுத்து, இவ்வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதனை சிவில் வழக்காக தொடரவும் மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 'தமிழ் ராக்கர்ஸ்' இணைய தளத்தை கடுமையாக சாடிப் பேசினார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'சிங்கம் 3' திரைப்படம் வருகிற பிப்.9 ஆம் தேதி உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கிறது.

Chennai High Court dismissed the plea on Singham 3 pirated release through websites today. Producer K.E.Gnanavelraja filed the petition in HC to ban the pirated release of the new movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்