ஆப்நகரம்

50 கோடி ரூபாய் வசூலை நோக்கி ரெமோ!

50 கோடி ரூபாய் வசூலை நோக்கி ரெமோ!

TOI Contributor 22 Oct 2016, 2:32 pm
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படம் வருகின்ற தீபாவளிக்குள் 50 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil siva karthikeyan remo collection will touch 50 crores
50 கோடி ரூபாய் வசூலை நோக்கி ரெமோ!


இந்த மாதம் 7ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படம் வெளியானது. அவருடன் கீர்த்தி சுரேஷ், சரண்யா, சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி இரண்டு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜை விடுமுறைகள், போட்டிக்கு குறைவான படங்கள் என்று சரியான நேரத்தில் திரைப்படத்தை வெளியிட்டதால் ரெமோ வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

வளர்ந்து வரும் நடிகர்களில் யாருடைய படமும் இந்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்றும், அந்த வகையில் சிவகார்த்திகேயன் பெரிய சாதனை நிகழ்த்திவிட்டார் என்றும் கூறப்படுகிறது. படம் குறித்தும், சிவகார்த்திகேயன் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், ஒரு பக்கம் ரெமோ வசூல் சாதனை படைத்து கொண்டு தான் இருக்கிறது. இனி தீபாவளிக்கு புதுப்படங்கள் வரும் என்பதால் அதற்குள் ரெமோ 50 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்