ஆப்நகரம்

ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்!

தர்பார் படப்பிடிப்பின் போது மும்பை சென்ற நடிகை ஸ்ரேயா சரண், ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 10 Oct 2019, 1:40 pm
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். மும்பையை சுற்றிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா சரண், மும்பை சென்றுள்ளார்.
Samayam Tamil Rajinikanth


அங்கு தர்பார் படப்பிடிப்பில் இருந்த ரஜினியுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் கெயின் ஆகியோர் உடனிருந்தனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திடீரென்று மாற்றப்பட்ட 'மிக மிக அவசரம்' ரிலீஸ் தேதி! காரணம் இது தானாம்...

இதன் மூலம், ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா நடிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து, தர்பார் குழுவினர் கூறுகையில், ஸ்ரேயா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மாறாக, தர்பார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ரஜினியை சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரேயா இருவரும் ஷங்கர் இயக்கத்தில் வந்த சிவாஜி படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில், தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் படமும் நன்றாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மைக்கேல் கார்சலையுடன் பிரேக் அப் குறித்து முதல் முறையாகப் பேசிய ஸ்ருதிஹாசன்!

ரஜினிகாந்த் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலருமாக இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பாப்பர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

என்னது சிம்பு மீது புகார் கொடுத்தேனா? ஞானவேல்ராஜா விளக்கம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயா ரஷியாவைச் சேர்ந்த ஆண்ட்ரீ கோஷீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு போதுமான சினிமா வாய்ப்பு அமையவில்லை. எனினும், தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இவரது நடிப்பில், உருவாகியுள்ள சண்டக்காரி படம் அடுத்த வருடம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்