ஆப்நகரம்

Sivaji Ganesan Songs: காலத்தாலும் வெல்ல முடியாத சிவாஜி கணேசன் பாடல்கள்!!

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவாக காலத்திற்கும் கரையாமல் நிற்கும் பாடல்களை உங்களுக்கு கொடுக்கிறோம். கேட்டு ரசிக்கவும்.

Samayam Tamil 1 Oct 2018, 3:06 pm
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாளில் நம் கண் முன்னே வந்து நிற்பது அவரது கம்பீர நடிப்பும், தூள் பறக்கும் வசனங்களும்தான்.
Samayam Tamil நினைவில் நிற்கும் சிவாஜி கணேசன் பாடல்கள்!!
நினைவில் நிற்கும் சிவாஜி கணேசன் பாடல்கள்!!


முதன் முதலில் 1952ஆம் ஆண்டில் பராசக்தி என்ற படத்தில் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். இந்தப் படத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதி இருந்தார். கருணாநிதியின் வலிமையான வசனத்துக்கு ஈடாக, முதல் படத்திலேயே சிவாஜி கணேசன் பிரமாதமாக நடித்து இருப்பார். கருணாநிதியின் வசனத்தை இவர் பேசி நடித்ததால்தான் முழுமை பெற்றது என்று கூட கூறலாம். அந்தளவிற்கு நடிப்பும், வசனங்களும் பறந்தன. இன்றும் இவரது நடிப்பில் இந்தப் படம் ஒரு மகுடமாக நிற்கிறது.

அவரது படங்களில் இருந்து அவரது நினைவாக சில பாடல்களை இங்கே காணலாம் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்