ஆப்நகரம்

விஞ்ஞானியாக மாறும் சிவகார்த்திகேயன் !

நடிகர் சிவகார்திகேயன் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு விஞ்ஞானி கெட்டப்பில் நடிக்க உள்ளார்.

Samayam Tamil 26 Feb 2018, 5:47 pm
நடிகர் சிவகார்திகேயன் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு விஞ்ஞானி கெட்டப்பில் நடிக்க உள்ளார்.
Samayam Tamil sivakarthikeyan acts in scientist role in next film
விஞ்ஞானியாக மாறும் சிவகார்த்திகேயன் !


பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிவகார்திகேயன் .’அது இது எது’ என்ற ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தோன்றி தனது டைமிங் காமெடியால் அனைவரின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் அதே தொலைக்காட்சி சேனலில் ’ஜோடி நம்பர் 1’ என்ற ரியலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார் .அதன் பிறகு திரைதுறைக்கு நடிகராக நுழைந்தார். அவரது நடிப்பு அதிகமான மக்களால் ரசிக்கப்பட்டது.

சிவகார்திகேயன் ஆரம்பத்தில் ஊர் சுற்றும் வாலிபராக காமெடி கலந்த வேடத்தில் நடித்து வந்தார். அதிபோன்ற வேடம்தான் தனக்கு கை கொடுக்கும் என்று நம்பினார் . வேலைக்காரன் படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். மோகன்ராஜா இந்த படத்தை இயக்கினார். இது சிவகார்த்திகேயனுக்கு புதுவிதமான படமாக அமைந்தது.

தற்போது , பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’வருதப்படாத வாலிபர் சங்கம்’ , ’ரஜினி முருகன் ’ மாதிரு இருக்கும் என்று கூறப்படுகிறது.

முதல் படத்தில் டைம் மிஷன் சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிகுமார் அடுத்து விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார்.
வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்தில் இவர் விஞ்ஞானி கெட் அப் யில் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்