ஆப்நகரம்

SK16 : இயக்குனர் பாண்டியராஜூடன் மூன்றாவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன்!

முதன் முறையாக தன்னை ஹீரோவாக வைத்து ‘மெரினா’ என்ற முதல் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் நடிக்கவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Samayam Tamil 9 Mar 2019, 1:44 pm
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் அஜித், விஜய் மறறும் சூர்யாவுக்கு அடுத்த லெவலில் இருக்கிறார். இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உளளனர். தற்போது இவர் நயன்தாராவுடன் இணைந்து ‘மிஸ்டர் லோக்கல் ’என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.
Samayam Tamil sivakarthikeyan


அடுத்ததாக பிரபல இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவுசெய்த சன் பிச்சர்ஸ் நிறுவனம் எஸ்.கே 16 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ‘மெரினா’ படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ் தான். ‘மெரினா’ படத்தை அடுத்து மீண்டும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இருவரும் இணையவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்