ஆப்நகரம்

தென்காசியில் ரொமான்ஸ் பண்ணும் சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் புகழ் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் ரைஸிங் ஸ்டார் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 18 Mar 2017, 7:35 pm
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் புகழ் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் ரைஸிங் ஸ்டார் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil sivakarthikeyan and samantha to romance in tenkasi
தென்காசியில் ரொமான்ஸ் பண்ணும் சிவகார்த்திகேயன்


தற்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருப்பதால் பொன்ராம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. வேலைக்காரனில் நயன்தாரா, பஹத் பாசில், சினேகா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் வரும் மே மாதம் முதல் பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியை சுற்றிலும், கிராமத்தை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha Ruth Prabhu has long back signed a project with the ‘Rising Star’ Sivakarthikeyan for 24 AM Studios, which is headed by the actor’s close friend and yesteryear manager RD Raja while director Ponram of Varudhapadatha Valibar Sangam and Rajini Murugan fame has been signed to direct the film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்