ஆப்நகரம்

இந்தியாவிலே முதன்முறை: சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் மாஸ் அப்டேட்..!

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படம் குறித்து நடிகை இஷா கோபிகர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 20 Apr 2022, 6:30 am
சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு மத்தியில் வெளியான படம் 'டாக்டர்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா அச்சுறுத்தலை எல்லாம் மீறி இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான், அயலான் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
Samayam Tamil Ayalaan
Ayalaan


'இன்று நேற்று நாளை' திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளத்தோடு சினிமாவிற்கு வந்தவர் ரவிக்குமார். இவரின் அடுத்த படைப்பாக கடந்த இரண்டு ஆண்டாக 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 'அயலான்' படப்பிடிப்பு பணிகள் மற்றும் டப்பிங் வேலைகள் மீண்டும் துவங்கப்பட்டது. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ரஜினி எடுக்கும் மெஹா ரிஸ்க்: தலைவருக்கு இதெல்லாம் சாதராணம்ப்பா.!
இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள இஷா கோபிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்ல், ’அயலான்’ படம் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் திரைப்படம் என்றும், இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இவர் விஜயகாந்த் நடித்த ’நரசிம்மா’ படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அயலான்' படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்