ஆப்நகரம்

பண்டிகை நாளை குறி வைத்து வெளியாகும் 'டான்' திரைப்படம்: உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் ரிலீஸ் குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 20 Jul 2021, 6:20 pm
சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கின்றன.இதில் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Sivakarthikeyan
Sivakarthikeyan


கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளது அரசாங்கம். இதனையடுத்து கொரோனா காரணமாக ஒத்தி வைக்கபட்ட பல படங்களின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் டான் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்: படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் மணிரத்னம்!
இந்தப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர். ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக வெளியான தகவலில் சோகத்தில் இருந் ரசிகர்களுக்கு டான் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் உற்சாகத்தை தந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்