ஆப்நகரம்

'don' சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் உருவாக்கிய சூப்பர் கிஃப்ட்

டான் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுக்காக அழகான பரிசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

Samayam Tamil 13 May 2022, 11:12 am
டான் சிவகார்த்திகேயனுக்காக அவரின் ரசிகர் ஒருவர் அழகான பரிசுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
Samayam Tamil sivakarthikeyan fan has a don gift for him
'don' சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் உருவாக்கிய சூப்பர் கிஃப்ட்


டான்

புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் டான் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்து கொண்டிருக்கிறார் டான். சமூக வைலதளங்களில் டானை கொண்டாடுகிறார்கள்.

பரிசு

சிவகார்த்திகேயனை டான் கெட்டப்பில் வரைந்திருக்கிறார் ரசிகர் ஒருவர். தான் உருவாக்கிய படைப்பின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதை விரைவில் சிவகார்த்திகேயனிடம் அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்கிறார்கள்.

Twitter-Marshal Creator

சிவகார்த்திகேயன்

அந்த ரசிகர் உருவாக்கிய ஓவியத்தின் ட்வீட் சிவகார்த்திகேயன் கண்ணில் பட்டால் நிச்சயம் பாராட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை. பாசத்தையும், திறமையையும் கொண்டாடும் நபர் சிவகார்த்திகேயன். அதனால் அந்த பரிசு விரைவில் சிவகார்த்திகேயனிடம் சென்றடைய வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.

மகிழ்ச்சி

டான் பற்றி பலரும் சமூக வலைதளங்களில் நல்லவிதமாக பேசிக் கொண்டிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. புதுமுகமாக இருந்தாலும் படத்தை நேர்த்தியாக இயக்கி இளசுகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸை கவர்ந்துவிட்டார் சிபி சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்