ஆப்நகரம்

மோகன் ராஜா படத்துக்கு ஆயத்தமாகும் சிவகார்த்திகேயன்

'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் 'தனி ஒருவன்' பட இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணையவுள்ள படத்துக்கு தயாராகி வருகிறார்.

TNN 7 Aug 2016, 6:29 pm
சென்னை: 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் 'தனி ஒருவன்' பட இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணையவுள்ள படத்துக்கு தயாராகி வருகிறார்.
Samayam Tamil sivakarthikeyan is getting ready for mohan rajas next
மோகன் ராஜா படத்துக்கு ஆயத்தமாகும் சிவகார்த்திகேயன்


இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் 'லேடி சூப்பர்ஸ்டார்' ஆக திகழும் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். 'ரெமோ' படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கவிருக்கிறார்.

மேலும், இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முதன் முறையாக தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். ஃபஹத் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதிக்குள் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்