ஆப்நகரம்

சூரிக்காக மதுரையில் ஹோட்டல் திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சூரி தனது குடும்பத்தினருக்காக கட்டியுள்ள ஹோட்டல் ஒன்றை, அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

TNN 2 Nov 2017, 12:43 pm
மதுரை: நடிகர் சூரி தனது குடும்பத்தினருக்காக கட்டியுள்ள ஹோட்டல் ஒன்றை, அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
Samayam Tamil sivakarthikeyan opened comedian sooris hotel in madurai
சூரிக்காக மதுரையில் ஹோட்டல் திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்!


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சூரி. கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த இவர் சினிமாவில் வெற்றி பெற்றபின் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

தனது குடும்பத்திலேயே தற்போது நல்ல நிலையில் இருக்கும் சூரி, குடும்பத்தினருக்காக மதுரை காமராஜர் சாலையில் அம்மன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றைக் கட்டியுள்ளார்.

இந்த ஹோட்டலை திறந்து வைக்க சக நடிகரும் நண்பருமான சிவகார்த்திகேயனை சூரி அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்று சிவகார்த்திகேயன் மதுரைக்கு வந்து ஹோட்டலைத் திறந்து வைத்தார்.

முன்னதாக, சிவகார்த்திகேயன் வருவதை அறிந்த ரசிகர்கள், அவரைப் பார்க்க ஹோட்டல் முன் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Sivakarthikeyan opened Comedian Soori’s hotel in Madurai.

அடுத்த செய்தி

டிரெண்டிங்