ஆப்நகரம்

'தனுசு ராசி நேயர்களே' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 31 Oct 2019, 9:38 pm
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் தனுசு ராசி நேயர்களே. புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கி வரும் இதில் ஹரிஷ், ஆட்டோமொபைல் மெக்கானிக்காக நடிக்கிறார்.
Samayam Tamil 68955340


இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி நடிக்கிறார். ரியா உள்பட இன்னும் மூன்று நடிகைகள் படத்தில் நடிக்கின்றனர். இதில் ஹரிஷ் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள நபராக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரி்தது வருகிறது.

'மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா': இமான் வாக்கு பலிக்கட்டும்

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.


இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இது என்னடா பிகிலுக்கு வந்த சோதனை? வெறிச்சோடி காணப்பட்ட பிரபல திரையரங்கம்!

இதில் பெப்பியான என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுசு ராசி நேயர்களே படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்