ஆப்நகரம்

சீமாராஜா படத்திற்காக முறுக்கு மீசை வளர்க்கும் சிவகார்த்திகேயன் !

சீமராஜா படத்தின் புதிய தோற்றத்துக்காக நடிகர் சிவகார்திகேயன் முறுக்கு மீசை வளர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 9 May 2018, 11:25 am
சீமராஜா படத்தின் புதிய தோற்றத்துக்காக நடிகர் சிவகார்திகேயன் முறுக்கு மீசை வளர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sivakarthikeyan


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரு வெற்றி படங்களை கொடுத்த பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும், சீமராஜா படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக சிவாவிற்கு, சமந்தா நாயகியாகி இருக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நடிகை சிம்ரன் முதல்முறையாக மிரட்டும் வில்லியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கியமான பாகங்கள் எல்லாம் திரைப்படஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு, முன்பே முடிவடைந்த நிலையில், மீதி பாகங்களின் படப்பிடிப்பு மே மாதம்24 ஆம் தேதி தொடங்க உள்ளது. குற்றாலத்தில் இந்தபடப்பிடிப்பு நடைபெறும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது தலகோணாவில்படப்பிடிப்பு மாற்றப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முக்கியமான சண்டை காட்சிகளை அனல் அரசு இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படத்திற்காக சிவகார்திகேயன் புதிய தோற்றத்தில் தோன்ற உள்ளார். அதற்காக அவர் பெரிய மீசையை வளர்த்து வருகிறார். படத்தின் டப்பிங் மே மாதம் 15 தேதி தொடங்குகிறது. ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்து , ரிலீஸ் வேலைகள் தொடரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்