ஆப்நகரம்

காமெடி இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

பிரபல காமெடி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Samayam Tamil 17 Mar 2018, 4:12 pm
பிரபல காமெடி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
Samayam Tamil sivakarthikeyan will act with rajesh direction
காமெடி இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!


மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதால் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து முடித்தள்ளார். அடுத்தததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது காமெடி புகழ் இயக்குனர் ராஜேஷுடன் சிவகார்த்திகேயன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் இயக்கிய காமெடி படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதால், சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்