ஆப்நகரம்

HBD Sivakarthikeyan: எஸ்.கேயின் பிறந்தநாள் ட்ரீட்: மிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர், அவரது 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Feb 2019, 11:50 am
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர், அவரது 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil prin


சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 34 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



இந்த டீசரில் லோக்கல் லெவலுக்கும், ஸ்டேட்டஸ் லெவலுக்கும் இடையில் ஏற்படும் மோதல் எப்படி காதலாக மாறுகிறது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி, நயன்தாரா (கீர்த்தனா வாசுதேவன்), ஸ்டேட்டஸில் உயர்ந்த நிற்பதாகவும், கேவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இதில், சிவகார்த்திகேயன் (மனோகர்) பக்கா லோக்கல் லெவல்.

இருவருக்கும் இடையில், நடக்கும் மோதல் தான் படத்தின் கருவாக வந்துள்ளது. இதனை பார்க்கும் போது விஐபி 2 படத்தைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்