ஆப்நகரம்

Ayalaan: வேகமெடுக்கும் 'அயலான்' பட வேலைகள்: சிவகார்த்திகேயனின் அதிரடி திட்டம்.!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 26 Nov 2022, 6:32 pm
சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது
Samayam Tamil அயலான்
அயலான்


இதனிடையில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளத்தோடு சினிமாவிற்கு வந்தவர் ரவிக்குமார். இவரின் அடுத்த படைப்பாக கடந்த இரண்டு ஆண்டாக 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Pattathu Arasan Review: அதர்வாவுக்கு கைகொடுத்ததா 'பட்டத்து அரசன்'.?: முழு விமர்சனம் இதோ.!

இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக அயலான் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பைனான்ஸ் பிரச்சனை மற்றும் கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இந்தப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Kamal Haasan: இன்று விஜய் சேதுபதி என் காலில் விழுந்தார்.. நாளை.?: ஆண்டவரின் மாஸ் பேச்சு.!

இந்நிலையில் 'அயலான்' படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 'பிரின்ஸ்' படத்தின் தோல்விக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்