தமிழ் சினிமாவின் டாப் எண்டெர்டெய்னர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக கெரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், தனது திறமையால் டாப் ஹீரோவாக உயர்ந்துள்ளார். சினிமாவில் கனவில் உள்ள பல நட்சத்திரங்களுக்கு நம்பிக்கை நாயகனாக உள்ளார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலையும் குவித்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
VJ Chithra: விஜே சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் கல்யாணமே ஆகல... ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்!
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அயலான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. லேட்டஸ்ட் தகவலின்படி கிறிஸ்துமஸ் வாரத்தில் அயலான் படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏலியன்கள் குறித்த இப்படத்தின் ரிலீஸ் பணப் பிரச்சனையால் தாமதமானதாக கூறப்படுகிறது.
VJ Chithra: ஹேமந்த் வாக்குமூலத்தில் சொன்னதே வேறு... ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர்!
24ஏஎம் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அயலான் படமும் நிச்சயம் ஒரு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.