ஆப்நகரம்

இளைஞர்களை வெறி ஏத்தும் ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயனின் ஹீரோ படக்குழு இளைஞர்களை கவரும் வகையில் புதிய ப்ரொமோஷன் பணிகளை மேற்கொள்கிறது.

Samayam Tamil 23 Nov 2019, 4:06 pm
இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘ஹீரோ’. இதில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Samayam Tamil இளைஞர்களை வெறி ஏத்தும் ஹீரோ படக்குழு!
இளைஞர்களை வெறி ஏத்தும் ஹீரோ படக்குழு!


இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் .20ம் தேதி ரிலீசாகவுள்ளது.

விஜய்க்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்! எங்க தெரியுமா?

இந்த நிலையில் தற்போது படத்தின் ப்ரொமோஷன் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில், ஹீரோ படக்குழு புதிய கேம் ஒன்றை வெளியிட உள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இந்த கேம் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அந்த கேம், எது போன்று இருக்கும் என்று தெரிந்து கொள்ள வெறி தனமாக காத்திருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் #PlayHero என்ற ஹாஸ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வலிமை படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி? காரணம் இது தானம்...

கோலிவுட்டில் இதே போன்று முன்னதாக அஞ்சான் மற்றும் கோச்சடையான் பட ரிலீஸ் சமயத்தில் , அப்போது டிரெண்டில் இருந்த வீடியோ கேம் படக்குழு வெளியிட்டு ப்ரொமோஷன் செய்தனர். ஆனால், அந்த இரண்டுமே ரசிகர்களைக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்