ஆப்நகரம்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு பிரச்சனையா.?: ரசிகர்கள் அதிர்ச்சி.!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 10 Aug 2022, 6:33 pm
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'டான்' படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
Samayam Tamil சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்


'டான்' படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுதீப் இயக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தீபாவளிக்கு இந்தப்படம் வெளியாகவுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்க்கு மாவீரன் என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டு வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டனர் படக்குழுவினர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ டைட்டிலில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. ஷூட்டிங் துங்கிய 3 நாட்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா ராணி சீரியல் நடிகையுடன் பிரேக்கப்பா.?: பாக்கியலட்சுமி எழில் சொன்ன தகவல்.!

'மாவீரன்' படத்தில் ஷங்கர் மகள் அதிதி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். 'விருமன்' படத்தினை தொடர்ந்து இந்தப்படத்தில் நடிக்கவுள்ளார் அதிதி. மேலும் பிரபல இயக்குனர் மிஷ்கினும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிகை சரிதா, யோகி பாபு உள்ளிட்டோரும் 'மாவீரன்' படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்