ஆப்நகரம்

சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு சீம ராஜா என்ற டைட்டிலா?

சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு சீம ராஜா என்று டைட்டில் வைத்துள்ளதாக தெரிகிறது.

TNN 10 Dec 2017, 6:07 pm
சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு சீம ராஜா என்று டைட்டில் வைத்துள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil sivakarthikeyans next movie title seema raja
சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு சீம ராஜா என்ற டைட்டிலா?


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றவாது முறையாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதில், காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி நடித்து வருகிறார். இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சீம ராஜா என்ற பெயரை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்