ஆப்நகரம்

சிவகார்த்திகேயனின் ''ரெமோ'' தெலுங்கிலும் ரிலீஸ்!

தமிழில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நுழைகிறார்.

TOI Contributor 1 Nov 2016, 2:40 pm
தமிழில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நுழைகிறார்.
Samayam Tamil sivakarthikeyans remo will be released in telugu
சிவகார்த்திகேயனின் ''ரெமோ'' தெலுங்கிலும் ரிலீஸ்!


தமிழில் மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ''ரெமோ'' என சிவகார்த்திகேயன் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இந்த வெற்றிக்குப் பின்னர் தன்னுடைய சம்பளத்தை ரூ. 15 கோடியாக உயர்த்தி விட்டதாகவும், இவருக்கு முன்பு தமிழ் திரையுலகிற்கு வந்த தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களையும் சிவகார்த்திகேயன் ஓரம் கட்டி விட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ரெமோ' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்கான பணிகளை துவக்கி இந்தப் படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது.

தமிழ்ப் படங்களுக்கு தெலுங்கில் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. நடிகர் கார்த்திக் நடித்த ''காஷ்மோரா'' திரைப்படம் தமிழை விட தெலுங்கில் அதிக திரையரங்குகளில் ஓடி நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ளது. தமிழ் படங்களுக்கு தெலுங்கில் கிடைத்துள்ள வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் 'ரெமோ' படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுக்கு விற்றனர். அவர் இந்தப் படத்தை வெளியிட தயாராகி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மாதமே ரெமோ தெலுங்கில் டப்பாகி வெளியாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்