ஆப்நகரம்

நயன்தாராவை ஏமாற்றும் சிவகார்த்திகேயன்: காமெடி வீடியோ வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது.

TNN 19 Dec 2017, 2:53 pm
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது.
Samayam Tamil sivakarthikeyans velaikkaran movie comedy video released
நயன்தாராவை ஏமாற்றும் சிவகார்த்திகேயன்: காமெடி வீடியோ வெளியீடு!


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். சமூக அக்கறையை மையப்படுத்தியுள்ள இப்படத்திற்கு தணிக்கைக் குழு பாராட்டு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக தினமும் ஒவ்வொரு வீடியோவாக வெளியாகி வருகிறது. அந்த வகையில், சின தினங்களுக்கு முன் இப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இணைந்து பாட்டு பாடும் ஒரு பாடலின் புரோமோ வெளியாகியது.



இதைத் தொடர்ந்து, தற்போது, இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காமெடி வீடியோ வெளியாகியுள்ளது. இதில், சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் இணைந்து நயன்தாராவை ஏமாற்றும் வகையில் அந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் 39 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்