ஆப்நகரம்

அபார திறமை கொண்ட சிவக்குமாரின் மகள் பிருந்தா!

நடிகர் சிவக்குமாரின் மகள் பிருந்தா சிவக்குமார் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் பாடல் ஒன்றை பாடி தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 25 Apr 2018, 4:15 pm
நடிகர் சிவக்குமாரின் மகள் பிருந்தா சிவக்குமார் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் பாடல் ஒன்றை பாடி தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil Brindha.


நடிகர் சிவக்குமாரின் மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். சூர்யாவிடம் ஒருவித நடிப்பும், கார்த்தியிடம் வேறுவித நடிப்பும் உள்ளது.

இந்த நிலையில் இவர்களின் தங்கை பிருந்தாவும் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். கௌதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி’ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்தப் படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டார். மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘சந்திரமௌலி...’ என்ற பாடலை பிருந்தா சிவகுமார் பாடி அசத்தியுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்