வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்', பல முன்னனி இயக்குநர்களின் ஆந்தாலஜி, ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனியின் படம், புன்னகை பூ கீதாவின் நானும் 'சிங்கிள் தான்', தெலுங்கு ரீமேக் சீ/ஓ காதல் மற்றும் திரில்லர் படம் என பல்வேறு ஜெனர்களில் ரசிகர்களை குஷிபடுத்த 6 படங்கள் திரைக்கு வருகிறது. கொரோனா லாக்டவுனிற்கு பிறகு, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க பல முன்னனி நடிகர்களின், படங்களை ரீ ரிலீஸ் செய்து வந்தார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனைத் தொடர்ந்து கடந்த பொங்கல் அன்று விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பல முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் வெளியிட முன் வந்துள்ளனர் . அந்த வகையில் கடந்த 5 ஆம் தேதி மூன்று தமிழ் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது..ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகிய 'களத்தில் சந்திப்போம்', யோகி பாபுவின் 'ட்ரிப்' மற்றும் சக்தி சிவன் இயக்கி நடித்த 'ஆட்கள் தேவை' ஆகிய படங்கள் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்' படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், சாண்டி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்களுக்கான வரவேற்பு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 'சில்லுக்கருப்பட்டி’, ‘புத்தம் புது காலை’, ‘பாவ கதைகள்’ போன்ற ஆந்தாலஜி திரைப்படங்களைத் தொடர்ந்து, பல முன்னனி இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படம் தான் 'குட்டி ஸ்டோரி'. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, அமலாபால், கௌதம் மேனன், அதிதி பாலன், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 12ஆம் தேதியன்று திரைக்கு வர இருக்கிறது.
மேலும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏலே’ படமும் திரைக்கு வருகிறது. எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி உள்ளனர். இந்தப்படமும் வருகிற 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அடுத்ததாக, 'புன்னகை பூ கீதா' நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள்தான்'. கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர. இந்தப் படத்யை கோபி இயக்கி உள்ளார். ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படம். இந்தப்படமும் 12ஆம் தேதி ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நகைச்சவை திரைப்படம் 'சி/ஓ காதல்'. இந்தப்படத்தில் 'ஜீவி', 'எட்டு தோட்டாக்கள்' போன்ற படங்களில், நடித்த வெற்றி நடித்துள்ளார்..பிப்ரவரி 12ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுவீகர் அகஸ்தி இசையமைத்துள்ளார்.
இறுதியாக ரேகா மூவீஸ் புரொடக்ஷன்ஸின் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவிருக்கும் ஹாரர் திரில்லர் படம் 'இது விபத்து பகுதி'. வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றை விஜய் திருமூலம் கையாண்டுள்ளார். கை தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் சஸ்பென்ஸ், ஹாரர் திரில்லர் படமாக இருப்பதால் படம் விறுவிறுப்பான கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.